- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது(Ainthil Valayaathathu Aimbathil Valayaathu).
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்(Agathin Azhagu Mugathil Theriyum).
- முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்(Mullai Mullal thaan edukka vendum).
- தனி மரம் தோப்பு ஆகாது(Thani Maram Thopu aagadhu).
- நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்(Nirai Kudam Neer Thalumbaadhu kurai kudam Koothadum).
- ஆழம் பார்க்காமல் காலை விடாதே(Aazham paakamal kaalai vidadhe).
- யானைக்கும் அடி சறுக்கும்(Yaanaikkum Adi Sarukkum).
- எறும்பு ஊரக் கல்லும் தேயும்(Erumbu ora kallum theiyum).
- ஆற்றில் போட்டாலும் அளந்து போடு(Aatril pottaalum alandhu podu).
- நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்(Nizhalin arumai veiyilil thaan theriyum).
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது(Kadugu ciruththaalum kaaram kuraiyaathu).
- மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது(Moorthy chinnathaanalum keerthi periyathu).
- புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது(Puli Pasitthalum Pullai Thinnadhu).
- சிறு நுணலும் தன் வாயால் கெடும்(Ciru nunalum than vaayaal kedum).
- பாம்பின் கால் பாம்பறியும்(Paambin kaal paambariyum).
- மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல(Minnuvathellam ponnu alla.).
- வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்(Verumkai enbathu moodathanam,un viralgal pathum mooladhanam.)
- வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்.(Veetai kattipaar,kalyanathai senjuppar).
- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்(Muyarchi udayar igalchi adayar.)
- தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.(Thannirai kooda salladail allalam, athu panikati agum varai poruthal).
- ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்(Aadath thireyathaval medaii konal enralaam).
- அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும்(Adi mel adi vaithal ammium nagarum).
- விதியை மதியால் வெல்லலாம்(vidhiyai madhiyaal vellalaam).
- மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்(Malayai kelli eliyai pidiththaanaam).
- சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்(Sundaikkaai kaal panam sumaikkooli mukkaal panam).
- கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து(kaana mayilaada kandiruntha vaan kozhi, thaanum adhuvaaga paavithu than pollach chiragai virithu).
- நாய் விற்ற காசு குரைக்காது(Naai vitra kaasu kurakkaadhu).
- விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்ஜலம்(vilakkamatrukku pattu kunjalam).
- ஆறெல்லாம் பாலாய்ப்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்(Aarellaam paalai ponaalum naai nakkiththaan kudikkum).
- நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்(Naai vedam pottal kuraiththuthaan aagavendum).
- நாய் வாலை நிமிர்த்த முடியாது(Naai vaalai nimirtha mudiyathu).
- பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்(Paalukkum kaaval poonaikkum thozan).
- ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை(Aakkapporthuavanukku aaraporukkavillai).
- குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.(Kuppura vizhunthaalum meesaiyil man ottavillai).
- கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை(Koozhukkum aasai meesaikkum aasai).
- கட்டிக்கொடுத்த சாப்பாடும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் பல நாள் தாங்காது(Kattikkodotha chaappaadum chollikkodutha vaarthaiyum pala naaal thaangathu).
- ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது(Ettuchchuraikkai kootukku uthavathu).
- பொறுத்தார் பூமி் ஆள்வார்(Poruththaar Boomi Aazhvaar).
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்(Kaatrullapothe thootrikol).
- தீதும் நன்றும் பிறர் தர வாரா(Theedhum nandrum pirar thara vaara).
Wait for more...